என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இளம் பெண் மாயம்"
- விடிந்து காலையில் எழுந்து பார்த்தபோது கீதா காணவில்லை.
- இதனால் பதறிப்போன சின்னுசாமி தனது மகளை உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னுசாமி. இவரது மகள் கீதா (வயது21). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்க சென்றார். விடிந்து காலையில் எழுந்து பார்த்தபோது கீதா காணவில்லை.
இதனால் பதறிப்போன சின்னுசாமி தனது மகளை உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்.
எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து சின்னுசாமி இண்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கீதாவை தேடிவருகின்றனர்.
- கணவர் புகார்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
வெம்பாக்கம் மேல் கஞ்சாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 29). சமையல் மாஸ்டர்.
இவரது மனைவி ரம்யா (23). இவர்களுக்கு மோஷித் (2), கவின் (11 மாத குழந்தை) என 2 மகன்கள் உள்ளனர். சுப்பிரமணி கடந்த 12-ந் தேதி சென்னை வடபழனிக்கு வேலைக்காக சென்றார்.
பின்னர் வேலை முடிந்து நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டிலிருந்த குழந்தைகள் இருவரும் அழுது கொண்டிருந்தனர்.
பின்னர் மனைவி ரம்யாவை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் வீடுகளில் ரம்யாவை சுப்பிரமணி தேடி உள்ளார்.
எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து பிரம்மதேசம் போலீசில் சுப்பிரமணி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ரம்யாவை தேடி வருகின்றனர்.
- இவர் தனது குடும்பத்துடன் வராகநதி அருகே கூட்டுகுடிநீர் திட்டத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்.
- வராக நதியில் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி:
தேனி அருகே கன்னிசேர்வைபட்டியை சேர்ந்தவர் எழில் மனைவி ரஞ்சனி(24). இவர்கள் மகன் பிரனித்ராஜ்(6). எழில் பெங்களூரில் என்ஜீயனராக பணிபுரிந்து வருகிறார். தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் ரஞ்சனி தனது குழந்தையுடன் சொந்தஊருக்கு வந்தார். அவரை அருகில் இருந்து கவனித்து வந்தநிலையில் மகனுடன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.
மேற்கு வங்காளம் மாநிலம் பரதமன் மாவட்டம் பரகாச்சியை சேர்ந்தவர் ஸ்ரீபாஸ்தாஸ். இவர் தனது குடும்பத்துடன் தேனி மாவட்டம் குள்ளப்புரம் பகுதியில் உள்ள வராகநதி அருகே கூட்டுகுடிநீர் திட்டத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆற்றங்கரையோரம் விளையாடிக்கொண்டிருந்த ஸ்ரீபாஸ்தாசின் மகள் ஸ்ரேயாதாஸ் திடீரென மாயமானார். அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டாரா என தெரியவில்லை. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் தீயணைப்புத்துறையி னருக்கும் தகவல் தெரிவித்து அவர்கள் வராக நதியில் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- ரம்யா தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்
- சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் ரம்யாவின் தாய் கல்பனா புகார் அளித்தார்
கள்ளக்குறிச்சி:
பெங்களூரில் வசித்து வருபவர் கிருஷ்ணராஜ். இவருடைய மனைவி கல்பனா. இவர்களுக்கு ரம்யா (வயது 21)என்ற மகள் உள்ளார். இவர் சின்னசேலம் அருகே உள்ள இந்திலி கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கி சேலம் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. .27 -ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் கடந்த 21 -ந் தேதி கல்லூரிக்கு சென்ற ரம்யா வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிந்த இடங்களில் தேடிப் பார்த்து எங்கேயும் கிடைக்காததால் சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் ரம்யாவின் தாய் கல்பனா புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சின்னசேலம் போலீசார் மாயமான கல்லூரியின் மாணவி ரம்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மகள் சந்தியா (வயது 16) சம்பதவன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
- திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் சேர்ந்தவர் சபீர் அகமது. இவரது மகன் காதர் உசேன் (வயது 22)
திருச்சி
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மகள் சந்தியா (வயது 16) சம்பதவன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது தொடர்பாக அவரது தந்தை ரெங்கராஜ் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தியாவை தேடி வருகின்றனர்.
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் சேர்ந்தவர் சபீர் அகமது. இவரது மகன் காதர் உசேன் (வயது 22) இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் வேலை தேடி செல்கிறேன் என்று கூறி சென்றவர் நீண்ட நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை சமீர் அகமது அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காதர் உசேனை தேடி வருகின்றனர்.
- மண்ணச்சநல்லூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்கிற சிவா (வயது 32). இவருக்கும் பவித்ரா (24) எண்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது
- கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
திருச்சி,
திருச்சி மண்ணச்சநல்லூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்கிற சிவா (வயது 32). இவருக்கும் பவித்ரா (24) எண்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இதில் அவ்வப்போது பவித்ரா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவாராம். பின்னர் சில தினங்கள் கழித்து கணவர் வீட்டுக்கு வந்து விடுவார்.
இந்த நிலையில் கடந்த 5 தினங்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்ற பவித்ரா பின்னர் வீடு திரும்பவில்லை.ஆனால் அன்றைய தினம் அவரது பெற்றோர் வீட்டுக்கும் அவர் செல்லவில்லை என்பது தெரிய வந்தது.கிருஷ்ணகுமார் மனைவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார்.ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து கிருஷ்ணகுமார் மன்னச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் வழக்கு பதிவு செய்து மாயமான பவித்ராவை தேடி வருகிறார். இதற்கிடையே பவித்ராவுக்கு சிவா என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆகவே அந்த வாலிபர் அவரை கடத்திச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அந்த அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.
- அந்த பணத்தை சில நாட்களுக்கு முன் செந்தில்குமார் பார்த்த போது அது காணாமல் போய் இருந்தது.
- இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்தது.
கடலூர்:
சிதம்பரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (வயது 36) இவர்களுக்கு திருமணம்,ஆகி9 வயதில் பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் செந்தில்குமார் ரூ.2 லட்சம் பணத்தை தனது வீட்டில் வைத்திருந்தார். அந்த பணத்தை சில நாட்களுக்கு முன் செந்தில்குமார் பார்த்த போது அது காணாமல் போய் இருந்தது. அதை சரண்யா எடுத்து புவனகி ரியில் உள்ள ஒரு வங்கியில் தனது பெயரில் வங்கி கணக்கில் செலுத்தி வைத்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து செந்தி ல்குமார் தனது மனைவி சரண்யாவிடம் கேட்ட போது, இருவருக்கும் இடையில்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்தது. இதனால் சரண்யா கணவர் செந்தில்குமாரிடம் கோபித்துக் கொண்டு தனது 9 வயது குழந்தையுடன் புவனகிரியில் உள்ள அண்ணன்உத்தண்டி என்பவரது வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து தனது குழந்தையுடன் வெளியே சென்றசரண்யாவை காணவில்லை. இதுகுறித்து அவரதுஅண்ணன் உத்தண்டிபுவனகிரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் சென்ற சரண்யா எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது குறித்து தேடி வருகி ன்றனர்.
- கஜலட்சுமி பஸ் நிறுத்தம் சாலையில் உள்ள தனியார் செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
- பின்னர் அவர் வீடு திரும்பவில்லை
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கணபதி நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவரது மகள் கஜலட்சுமி(வயது 19). இவர் பஸ் நிறுத்தம் சாலையில் உள்ள தனியார் செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் வழக்கம்போல் நேற்று காலை செல்போன் கடைக்கு வேலைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அவரை உறவினர்கள் வீடுகள், தோழிகள் வீடுகள் என பல்வேறு இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் கஜலட்சுமியின் தாய் புனிதா புகார் அளித்தார். அதன்பேரில் கஜலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.
- சிதம்பரம் அருகே கடைக்கு சென்ற இளம் பெண் மாயமானார்.
- மாயமான விஜயலட்சுமி என்ன ஆனார் எங்கு சென்றார் யாரேனும் கடத்தப்பட்டாரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
சிதம்பரம் அருகே வ..உசி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 18) இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து கடைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் விஜயலட்சுமி பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து விஜயலட்சுமி தாய் பொன்மணி சிதம்பரம் நகர தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சிதம்பரம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான விஜயலட்சுமி என்ன ஆனார் எங்கு சென்றார் யாரேனும் கடத்தப்பட்டாரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்